நாளை நோ நடைபயணம்… காரணம் என்ன??

புதன், 14 செப்டம்பர் 2022 (10:35 IST)
நாளை ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நடைபெறாது என தெரிகிறது.


கடந்த 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இப்போது கேரளாவில் இந்த ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறும். கன்னியாகுமரியில் துவங்கிய இந்த நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் ராகுலின் நடைபயணம் 4 நாட்கள் நடந்தது.

கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய பாதயாத்திரை இன்றுடன் 8-வது நாளை எட்டியுள்ளது. ராகுல் காந்தி 8 நாட்களாக தொடர்ந்து நடந்து வருவதால் அவரது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் ஒற்றுமை பயணம் தொடரும் என்று ராகுல் காந்தி கூறினார்.  

இந்நிலையில் ராகுலின் பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் குழுவினர் ராகுல் காந்தி நாளை ஓய்வெடுக்க உள்ளதாக கூறியுள்ளனர். இதனை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் தெரிவித்தனர். எனவே நாளை ராகுல் காந்தி நடைபயணம் நடைபெறாது என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்