வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை; ராகுல் காந்தி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (11:28 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 3000 வழங்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி என்ற பகுதியில் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். 
 
அப்போது அவர் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவசம் மின்சாரம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி போன்ற வாக்குறுதிகளை தெரிவித்தார். 
 
மேலும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்