அசாம் மாநில முதல்வரின் ஒட்டுமொத்த குடும்பமும் ஊழலில் திளைத்துள்ளது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் காந்தி தற்போது மணிப்பூர் முதல் மும்பை வரை இரண்டாவது கட்டப் பாத யாத்திரை சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் செல்லும் வழியெல்லாம் பொதுமக்கள் அவருக்கு அபார வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அவர் அசாம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் என்றால் அது அசாம் மாநிலம் தான் என்றும் பெரிய ஊழல்வாதி என்றால் அது அசாம் முதல்வர் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த யாத்திரையின் போது அசாம் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தோலுரிப்போம் என்றும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வா சர்மாவின் ஒட்டுமொத்த குடும்பமும் ஊழலில் திளைத்து உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வரின் மனைவி குழந்தைகள் என அனைவரும் ஊழல்வாதிகள் என்றும் பணத்தைக் கொண்டு அசாம் மக்களை விலைக்கு வாங்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் ஆனால் அசாம் மக்களை அப்படி விலைக்கு வாங்கி விட முடியாது என்றும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி பேசினார்