இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய எதிர்கட்சிகள் இவ்விவகாரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி “நாங்கள் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான். இந்திய அரசு பெகாசஸ் மென்போருளை வாங்கியதா? இல்லையா? அரசு இந்த மென்பொருளை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தியதா? இல்லையா? இதுகுறித்த தெளிவான பதிலை கூறாமல் இதுகுறித்த எந்த விவாதத்தையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசு நடந்து கொள்கிறது” என கூறியுள்ளார்.