உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பண்டைய கால நாகரிகங்கள் குறித்த தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில் இந்தியாவின் சிந்து நதிக்கரையோர பண்பாடான ஹரப்பா நாகரிகம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கி.மு 3 ஆயிரத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படும் இப்பகுதியில் ஹரப்பாவின் முக்கிய நகரமான தோல்வுராவை தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.