இவங்களையாவது பிடிப்பீங்களா? இல்ல தப்பிக்க விடுவீங்களா?– ராகுல் காந்தி கேள்வி!

திங்கள், 20 ஜூலை 2020 (11:51 IST)
இந்தியாவில் உள்ள அரசு வங்கிகள் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் குறித்து வங்கிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பட்டியல் குறித்து பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.

இந்தியாவில் உள்ள 17 அரசு வங்கிகளில் 2,426 நிறுவனங்கள் 2019 வரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 350 கோடி ரூபாட் கடன் பெற்றுள்ளதாகவும், ஆனால் அந்த கடன் தொகைகள் திரும்ப செலுத்தப்படவில்லை என்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 17 அரசு வங்கிகளில் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தொகை தரப்பட்டுள்ளது என்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வங்கிகள் கூட்டமைப்பின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி “மக்களுக்கான அரசு வங்கிகளில் ரூ.1.47 லட்சம் கோடியை 2,426 நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன. அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்குமா? அல்லது நீரவ் மோடி மற்றும் லலித் மோடியை தப்ப விட்டது போல இவர்களையும் வெளிநாடுகளுக்கு தப்ப விடுவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்