கொரோனா பீதியை மீறி திறக்கப்பட்ட திருப்பதி கோவில்! – அர்ச்சகர் உயிரிழப்பு!

திங்கள், 20 ஜூலை 2020 (10:22 IST)
கொரோனா ஊரடங்குகள் முடிந்து திருப்பதி கோவில் திறக்கப்பட்ட நிலையில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் மாநில அரசுகள் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.

இதனால் திருப்பதி கோவில் திறக்கப்பட்டு உள்ளூர்வாசிகள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் உட்பட 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 75 வயது மூத்த அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்தில் கொரோனாவால் பதிவாகியுள்ள முதல் இறப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்