இன்று விநாயகர் சதூர்த்தி.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

Siva

புதன், 27 ஆகஸ்ட் 2025 (09:39 IST)
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
இதுகுறித்து பிரதமர் மோடி தனது  வாழ்த்து பதிவில்,  “பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த நாளில், கணேஷ் பகவான் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்” என்று கூறியுள்ளார்.
 
அதேபோல் ராகுல் காந்தி தனது வாழ்த்து பதிவில், ‘விநாயகர் சதுர்த்தி திருநாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல தருணம் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஏற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்