அவதூறு வழக்கு தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை: மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் ராகுல் காந்தி

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (15:02 IST)
அவதூறு வழக்கின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்திற்கு ராகுல் காந்தி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி  பறிபோனது. 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில் அதன் வழக்கு என்று விசாரணைக்கு வந்தது. அதில் அதிகபட்ச தண்டனை கொடுத்தது தவறு என்றும் அதற்கான காரணத்தை கிழமை நீதிபதி தெரிவிக்கவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்தார். 
 
மேலும் கிழமை நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனை அடுத்து மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்