இந்தியா வந்தடைந்தன ரஃபேல் விமானங்கள்! – மக்கள் வெளியே வர தடை!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (14:50 IST)
பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்டுள்ள ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்குள் நுழையும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் விமானங்களை வாங்க 2016ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானங்களை கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொண்டார்.

இந்த விமானங்கள் கடந்த மே மாதமே இந்தியா வர இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் ஒப்படைப்பு பணி தாமதமானது. இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கான ரஃபேல் விமானங்கள் ஐந்து பாரிஸிலிருந்து இந்தியா புறப்பட்டுள்ளன. இந்த விமானங்களை இந்திய வீரர்களே இந்தியாவுக்கு இயக்கி கொண்டு வருகின்றனர். பாரிஸிலிருந்து நேற்று கிளம்பிய இந்த விமானங்கள் அரபு நாட்டில் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் புறப்பட்டு இந்தியா வந்தடைந்துள்ளன.

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்படும் இந்த விமானங்கள் விரைவில் விமானப்படையில் இணைக்கப்படும். ரஃபேல் விமானம் வருகையையொட்டி அம்பாலாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்