பஞ்சாப் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? – தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (13:07 IST)
பஞ்சாபில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவில் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாபில் பிப்ரவரி 14 தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிப்ரவரி 16ம் தேதி ரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளநிலையில் அதற்காக பல்வேறு பஞ்சாப் மக்களும் உத்தர பிரதேசம் செல்வது வழக்கம்.

இதனால் தேர்தலில் வாக்களிப்பது பாதிக்கப்படும் என பஞ்சாப் அனைத்து கட்சிகளும் தேர்தல் தேதியை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து தேசிய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்