கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை! – பஞ்சாப்பில் அவசர சட்டம்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (10:52 IST)
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாராய குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்க பஞ்சாப் அரசு முடிவெடுத்துள்ளது.

பஞ்சாபின் அமிர்தசரஸ், குர்தாஸ்புர் உள்ளிட்ட பல பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ள நிலையில் அதை உட்கொண்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் கள்ளச்சாராயத்தால் பஞ்சாபின் முக்கியமான மூன்று மாவட்டங்களில் மட்டும் 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்க பஞ்சாப் அரசு தண்டனையை கடுமையாக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும், ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் கலால் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர பஞ்சாப் அரசு தீர்மானித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்