பதவியேற்பு விழாவில் ஆம் அத்மியினர் மட்டுமே!!

புதன், 16 மார்ச் 2022 (11:22 IST)
முதல்வர் பகவந்த்மான் பதவியேற்பு விழாவில் பஞ்சாபி முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்பட பிற கட்சி நிர்வாகிகள் தலைவர்களுக்கு அழைப்பில்லை. 

 
சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றதை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
 
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் பகவந்த் மானுக்குதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் பதவியேற்பு விழாவில் முழுக்க முழுக்க ஆம் ஆத்மியினர், மக்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர் என தெரியவந்துள்ளது.
 
பஞ்சாபி முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்பட பிற கட்சி நிர்வாகிகள் தலைவர்களுக்கு அழைப்பில்லை. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்