பஞ்சாப் முதல்வராக பதவியேற்க இருக்கும் பகவந்த் மான் ராஜினாமா!
செவ்வாய், 15 மார்ச் 2022 (08:54 IST)
பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் பகவந்த் மான் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியை 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது இதனை அடுத்து முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான் ஏற்கனவே எம்பியாக இருக்கும் நிலையில் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்
ஏற்கனவே அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதாகவும் இதனை அடுத்து வரும் விரைவில் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது அவருடன் 16 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது