பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக மார்ச் 16ல் பதவியேற்பு: கெஜ்ரிவாலிடம் ஆசி பெற்றார்!

வெள்ளி, 11 மார்ச் 2022 (17:51 IST)
பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக மார்ச் 16ல் பதவியேற்பு: கெஜ்ரிவாலிடம் ஆசி பெற்றார்!
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து கட்சியின் முதல்வர் வேட்பாளர்  பகவந்த் மான் வரும் 16-ம் தேதி முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சுதந்திர போராட்டத்திற்காக தனது உயிரை தியாகம் செய்த பகத்சிங்கின் சொந்த கிராமத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 
இந்த நிலையில் டெல்லி சென்ற பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்க இருக்கும்  பகவந்த் மான், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து வாழ்த்து பெற்றார் 
 
மேலும் பதவி ஏற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்