புனேவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் குறிப்பிட்ட நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என்று நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதால் மாணவிகளின் பெற்றோர்கள் கொதித்தெழுந்துள்ளனர்,
புனேவில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகிகள் சமீபத்தில் ஒரு நிபந்தனையை மாணவிகளுக்கு விதித்துள்ளனர். அதன்படி மாணவிகள் இனிமேல் வெள்ளை நிறம் அல்லது அவர்களுடைய ஸ்கின் நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை மாணவிகள் அனைவரின் டயரியில் எழுதி, பெற்றோர்கள் அதில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாணவிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றும் தண்ணீர் அருந்தவும் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்ல வேண்டும் என்றும் நேரம் குறிப்பிட்டு ஒரு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
இதனால் பெற்றோர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மாணவிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து புனே கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.