அமித்ஷாவை சந்திக்கிறார் புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (21:45 IST)
புதுவை அமைச்சர் நமச்சிவாயம் திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் என்பதும் அதனை அடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார் என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து புதுவையில் அரசியல் நிலைமை பெரும் பரபரப்புக்கு உள்ளானது. நமச்சிவாயத்தை அடுத்து மேலும் சில எம்எல்ஏக்கள் விலகுவதாக தகவல்கள் வெளி வந்ததால் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து என்ற கேள்வியும் எழுந்தது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நமச்சிவாயம் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நாளை டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் பாஜகவில் அமிர்ஷா முன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்