காதலர்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த பொதுமக்கள்: அதிர்ச்சி வீடியோ!!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (13:13 IST)
காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி வந்ததால் அவர்களை நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 
 
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா அருகே உள்ள ஷம்புபூரா கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஊரை விட்டே ஓடிவிட்டனர். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் அவர்கள் குறித்து காவல்துறையிடம் ஏதும் புகார் அளிக்காமல், உறவினர்கள் காதல் ஜோடியை தேடி அலைந்துள்ளனர். 
 
இதற்கிடையில் அவர்கள் குஜராத்தில் இருந்தது தெரியவந்தது. இருவரை நிர்வாணமாக்கிய ஊர்மக்கள், சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். 
 
இதை சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக 4 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்