இந்தியாவுக்கு என ஒரு மரியாதை உள்ளது, நெகட்டிவ் பப்ளிசிட்டி நல்லதல்ல: பிடி உஷா

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (10:15 IST)
உலக அளவில் இந்தியாவுக்கு என ஒரு மரியாதை இருக்கிறது என்றும் நெகட்டிவ் பப்ளிசிட்டி நல்லதல்ல என்றும் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிடி உஷா தெரிவித்துள்ளார் 
 
மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக வீதியில் வந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பிடி உஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு என தனி கமிட்டி உள்ளது என்றும் விளையாட்டு வீரர்களுக்கு என கமிஷன் உள்ளது என்றும் கூறிய பிடி உஷா அப்படி இருக்கையில் அவர்கள் தெருவுக்கு சென்றதற்கு பதிலாக எங்களிடம் வந்திருக்கலாம் என்று தெரிவித்தார். 
 
இந்தியாவுக்கு என உலக அரங்கில் ஒரு மரியாதை இருக்கிறது என்றும் இப்படிப்பட்ட நெகட்டிவ் பப்ளிசிட்டி நாட்டுக்கு நல்லதல்ல என்றும் இந்த செயல்கள் இந்தியாவின் புகழை சீரழிக்கிறது என்றும் தெரிவித்தார். 
 
பாஜக எம்பி மற்றும் இந்திய ஒலிம்பிக் தலைவருமான பிரிஜ் சிங் மீது பாலியல் புகாரை மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்து போராடுவது குறித்து இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பிடி  உஷா மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்