பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன்? காங்கிரஸ் பொதுச்செயலாளர் விளக்கம்..!

Mahendran

வெள்ளி, 3 மே 2024 (14:54 IST)
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி அமேதி அல்லது ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அவர் சற்றுமுன் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அமேதி தொகுதிக்கும் வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரியங்கா காந்தி ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: 
 
பிரதமர் மோடியின் பொது பிரச்சாரத்தை தனது தீவிரமான பரப்புரையின் மூலம் ஒற்றை ஆளாக பிரியங்கா காந்தி பேசி வருகிறார் என்றும் காங்கிரஸ் கட்சிக்காக அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் அவரை ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் சுருக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்