பாஜக போட்டியிட வாய்ப்பு தந்தது, நான் தான் போட்டியிடவில்லை: விஜயதரணி

Siva

வியாழன், 2 மே 2024 (16:01 IST)
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக தனக்கு வாய்ப்பு அளித்ததாகவும் ஆனால் நான் தான் போட்டியிடவில்லை என்று மறுத்து விட்டேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயதரணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி திடீரென பாஜகவில் இணைந்தார் என்பதும் அவர் கன்னியாகுமரி தொகுதி எம்பிக்காக போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் தாரணிக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்தது என்றும் ஆனால் நான் தான் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் பாஜக தலைமை என்னை அழைத்து பேசியது என்றும் கன்னியாகுமரி தொகுதியில் மூத்த தலைவர் போட்டியிடுகிறார் எனவே நீங்கள் அவருக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது என்றும் இப்படி ஒரு அணுகுமுறையை நான் காங்கிரஸ் கட்சியில் பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்தார்.

பாஜகவில் எனக்கான மரியாதை உரிய நேரத்தில் கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் கண்டிப்பாக எனது திறமை மற்றும் அரசியல் அனுபவத்திற்கு ஏற்ற பதவி எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்