வயநாடு மக்களே.. சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள்: பிரியங்கா காந்தி வேண்டுகோள்..!

Mahendran
புதன், 23 அக்டோபர் 2024 (13:12 IST)
வயநாடு தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிற பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்பு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வயநாடு தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். 
 
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி இன்று கேரளா மாநிலம் வயநாட்டில் பேரணி நடத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன் அவர் பேசிய போது, "வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். 
 
17 வயதிலிருந்து எனது தந்தைக்கு நான் வாக்கு சேகரித்துள்ளேன். பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பிரச்சாரம் செய்துள்ளேன். முதல் முறையாக இப்போது எனக்காக நானே பிரச்சாரம் செய்கிறேன். 
 
மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தில் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். அதேபோல் இந்த பேரணியிலும் எந்தவித பேதமும் இன்றி மக்கள் திரண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 
 
வயநாடு மக்களுக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்," என்று கூறியுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்