அரசியலில் நுழைந்தபின் பிரியங்கா காந்தியின் முதல் டுவீட்

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (07:30 IST)
சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியுமான் பிரியங்கா காந்தி சமீபத்தில் தீவிர அரசியலில் நுழைந்தார். அவருக்கு உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்வார் என்றும், அடுத்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அரசியலில் நுழைந்தவுடன் டுவிட்டர் கணக்கை கடந்த பிப்ரவரியில் ஆரம்பித்த பிரியங்கா காந்தி நேற்று இரண்டு டுவீட்டுகளை பதிவு செய்துள்ளார். முதல் டுவீட்டில் "சபர்மதியில் எளிய மரியாதையுடன் உண்மை வாழ்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இரண்டாவது டுவீட்டில் நான் வன்முறையை எதிர்க்கிறேன். ஏனென்றால் அதன் மூலம் நன்மை விளையலாம் என்றாலும் அது தற்காலிகமானது; உடன் அது ஏற்படுத்திய தீமையோ எப்போதும் நிலைத்திருப்பது." என்ற மகாத்மா காந்தியின் கருத்தை பதிவு செய்து அவர் பயன்படுத்திய ராட்டை புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
 
2 லட்சத்து 37 பேர் பிரியங்கா காந்தியின் டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்து வரும் நிலையில் இந்த இரண்டு டுவிட்டுக்களும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும், ரீடுவீட்டுகளும், கமெண்டுக்களும் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்