மாணவர்கள் முன்பு மாணவிகளின் ஆடை கலைத்து சோதனை: தனியார் பள்ளியில் சர்ச்சை!!
வியாழன், 30 நவம்பர் 2017 (12:16 IST)
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளின் ஆடையை கலைத்துமாணவர்களுக்கு முன்பு சோதனை நடத்த கடடாயப்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசம் மாநிலம் பாபும் பரே மாவட்டத்தில் உள்ள தானி ஹப்பா என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியரை பற்றி தகாத வார்த்தையில் ஒரு பேப்பரில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பேப்பரை கண்டறிவதற்காக மாணவிகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 6 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் மூன்று ஆசிரியர்கள் மாணர்வர்களின் முன்பு ஆடையை கலைத்துசோதனை மேற்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 23 ஆம் தேதி நடந்துள்ளது. தற்போது இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பள்ளி நிற்வாகம் இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு மறுப்பயையோ விளக்கத்தையோ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மாணவிகளின் புகாரில் உண்மை இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.