குழந்தைகளை மன உளைச்சலில் இருந்த காக்க பள்ளிகளை திறக்க கோரிக்கை

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (14:22 IST)
குழந்தைகள் மன உளைச்சலில் உள்ளதால் பள்ளிக்கூடம் திறப்பது தான் சரி என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் கருத்து. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே நாடு முழுவதும் பள்ளிகளை பகுதி பகுதியாக திறக்க அரசுக்கு ஐசிஎம்ஆர் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் 6 - 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1 - 5 ஆம் வகுப்புகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
 
மேலும் குழந்தைகள் மன உளைச்சலில் உள்ளதால் பள்ளிக்கூடம் திறப்பது தான் சரி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்