குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த SBI வங்கி !.

சனி, 28 மார்ச் 2020 (15:19 IST)
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த SBI வங்கி !.

வங்கிகளுக்கான வட்டிவிகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்தத்தை அடுத்து, இன்று இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான ரிசர்வ் வங்கிக் கடன்களுக்காக வட்டி விகிதத்தை  குறைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நேற்று, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அவர் பல சலுகைகளை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தார். அப்போது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.


அப்போது, சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ள சலுகைகள்

 
 
இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான SBI , வங்கிக் கடன்களுக்காக வட்டி விகிதத்தை  குறைத்துள்ளது. அதில், வீட்டுக்கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான வட்டிவிகிதம்  75 அடிப்படைகள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, கடன் விகிதமானது 7.80 சதவீதத்தில் இருந்து 7.05 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதேசமயம் எஸ்.பி.ஐயின் ரெப்போ வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வட்டி விதிக்கும் திட்டத்தில், 7.40 சதவீதத்தில் இருந்து 6.65 சதவீதமாக குறாஉக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியில் சுமார் 30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுககான வட்டி 7.20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அறிவிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்