மாணவியிடம் சில்மிஷம் செய்த மத போதகர்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (19:06 IST)
ஓடும் ரெயிலில் மாணவியிடம் பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட தமிழக மத போதகரை கைது செய்து திருச்சூர் ஜெயிலில் அடைத்தனர்.


 

 
கேரள மாநிலம் திருச்சூர் வடக்கேகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறையையொட்டி மும்பை - கன்னியாகுமரி நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சூர் புறப்பட்டார். அந்த ரெயிலில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சோபு(29) என்பவரும் பயணம் செய்தார்.
 
சோபு கப்பியறை பகுதியில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். தன்னை மதபோதகர் என்று அவர் அந்த மாணவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சு கொடுத்துள்ளார். மதபோதகர் என்பதால் அந்த மாணவியும் சகஜமாக அவரிடம் பேசி உள்ளார்.
 
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சோபு அந்த மாணவியிடம் பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த ரெயில் பெட்டியில் இவர்கள் பயணம் செய்த பகுதியில் வேறு பயணிகள் யாரும் இல்லாததால் சோபுவின் சில்மி‌ஷம் தொடர்ந்து உள்ளது.
 
அதனால் அந்த மாணவி போன் மூலம் திருச்சூர் ரெயில்வே காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்து, திருச்சூர் ரெயில் நிலையத்தில் காவல் துறையினர் சோபுவை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி பிறகு திருச்சூர் காவல் துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். 
 
மாலும் திருச்சூர் காவல் துறையினர் சோபு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சூர் ஜெயிலில் அடைத்தனர்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்