நிதிஷ்குமாருக்கு ஆதரவளிக்க தயார், ஆனால் ஒரு நிபந்தனை: பிரசாந்த் கிஷோர்

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (11:02 IST)
பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்
 
இன்னும் 2 ஆண்டுகளில் பீகாரில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் 2 ஆண்டுகள் இந்த கூட்டணி ஆட்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசார வியூகம் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்துள்ள அறிக்கையில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால் என்னுடைய கட்சி அவரது கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் எதிர்காலத்தில் பீகார் மாநிலத்தில் பல அரசியல் எழுச்சிகளை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்