216 கோடி தடுப்பூசிகள் தயாராகிறது.. எல்லாருக்கும் தடுப்பூசி! – பிரகாஷ் ஜவடேகர் உறுதி!

வெள்ளி, 28 மே 2021 (16:50 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் அவசர கால அனுமதி பெற்று செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மாநில அரசுகள் பல தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ”டிசம்பர் 2021க்குள் இந்தியாவில் 108 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன” என அவர் தெரிசித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்