நேற்று மளமளவென சரிவை சந்தித்த தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்திற்கு நிகரான டாலர் மதிப்பு குறைய தொடங்கியதால் தங்கம் விலை கிடுகிடுவென ஏற்றத்தை சந்தித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் சில பொருளாதார முடிவுகளால் டாலர் மதிப்பு மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளது. இதனால் டாலர் மீதான முதலீடு அதிகரித்து தங்கம் விலை சரியத் தொடங்கியுள்ளது.
நேற்று முன் தினம் 22 காரட் சவரன் ரூ.96 ஆயிரமாக இருந்த தங்கம் நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை சரிந்து ரூ.92,320 ஆக ஆனது. அதை தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.320 சரிந்து ரூ.92 ஆயிரத்திற்கும் தங்கம் இறங்கியுள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.40 குறைந்து ரூ11,500 என்று விற்பனையாகி வருகிறது.
கடந்த பல நாட்களாக தொடர் விலையேற்றம் கண்ட தங்கம் ஒரு லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறாக சரிவை சந்தித்துள்ளதால் தங்கம் வாங்கும் நடுத்தர மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வெள்ளி விலையும் அதேபோல தொடர்ந்து விலை வீழ்ந்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.174 க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (சவரனில்):
அக்டோபர் 23 - ரூ.92,000
அக்டோபர் 22 - ரூ.92,320
அக்டோபர் 21 - ரூ.96,000
அக்டோபர் 20 - ரூ.95,360
அக்டோபர் 19 - ரூ.96,000
Edit by Prasanth.K