சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது, இதனையடுத்து இரண்டாவது முறையாகப் பதவியேற்ற மோடி, தனது மத்திய அமைசர்களுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது 2வது வெளிநாடு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு விமானநிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலத்தீவு நாட்டின் சார்பில் மிக உயரிய விருதான நிசான் விருதினை தற்போது இந்திய பிரதமர் மோடிக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்று முன்பு கோரிக்கை வைத்திருந்தார்.
தற்போது, மோடி நமது இந்திய அணி வீரர்கள் கையெழுத்துப் போட்ட ஒரு பேட்டை மாலத்தீவு அதிபருக்கு பரிசாக அளித்தார்.
இதனையடுத்து மாலத்தீவு கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் வீராங்களை பயிற்சி அளிக்கும்படி அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க .. அவர்களுக்கு இந்தியா உதவ தயாரக உள்ளது.
மேலும் மாலத்தீவில் முதலீடு செய்யவுள்ளதாகவும் மோடி உறுதி அளித்துள்ளார்.