தற்போது உலகம் முழுவதும் கிகி சேலஞ்ச் என்ற டிரெண்ட் பரவி வருகிறது. காரில் சென்று கொண்டிருக்கும் ஒருவர் திடீரென ஓடும் காரில் இருந்து இறங்கி நடுரோட்டில் டான்ஸ் ஆடி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச்
கனடாவை சேர்ந்த பாப் பாடகர் ஒருஅர் ஆரம்பித்து வைத்த இந்த சேலஞ்ச் தற்போது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பரவியுள்ளதால் பலர் நடுரோட்டில் திடீரென ஓடும் காரில் இருந்து இறங்கி காரின் உடன் சென்று கொண்டே நடனமாடுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருசில நாடுகளில் விபத்துக்களும், திருட்டுக்களும் இதனால் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் போக்குவரத்து போலீசார் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்து நிறைந்த இந்த சவாலை யாரும் ஏற்க வேண்டாம் என்றும் குறிப்பாக நடிகர், நடிகைகள் இந்த சவாலை ஏற்று பரப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். நேற்று நடிகை ரெஜினா ஓடும் காரில் இருந்து இறங்கி இந்த சேலஞ்சை ஏற்று நடுரோட்டில் நடனமாடிய வீடியோ வைரலானதை தொடர்ந்தே போலீசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்த சேலஞ்சால் ஏற்பட்ட ஒருசில விபரீதங்கள் குறித்த டுவீட்