முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். அவரின் குற்றச்சாட்டுக்கு யாரும் பதில் அளிக்காக நிலையில், இந்த சர்ச்சக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் “ஸ்ரீரெட்டி கூறியதில் உண்மை இல்லை. அவருக்காக பரிதாபப்படுகிறேன். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகை எனக்கூறுகிறார். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன், மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை அவர்கள் முன்பு நீங்கள் நிரூபித்து, இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக அறிவித்துள்ள ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் பல திரைப்பட பாடல்களுக்கு முகபாவனைகளை காட்டியும், நடனம் ஆடியும் பதிவு செய்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.