பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 2024 ஆம் ஆண்டு தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (Indian National Democratic Inclusive Alliance) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதையடுத்து, கடந்த 18 ஆம் தேதி டெல்லியில் தேசிய ஜன நாயக கூட்டணியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமமுக, ஐஜேகே, உள்ளிட்ட 38 கட்சிகள் பங்கேற்றன.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
நேற்று, திமுக அனைத்து வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தை திருச்சியில் பிரமாண்டமாக நடத்தியது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தேசிய ஜன நாயக கூட்டணியின் அனைத்து எபிக்களையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மா நில வாரியாக எம்பிக்களை சந்திக்கவுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.டி.ஏ கூட்டணி எம்பிக்களை பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சந்திக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிறது.