சமகால அரசியலில் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகம் பயன்படுத்தும் தலைவர்களில் ஒருவராக இருக்கும் பிரதமர் மோடி யூட்யூபை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். அரசாங்க முன் முயற்சிகள், கொள்கைகள் குறித்த தகவல்கள் அவரது யூ-டியூப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் உலக அளவில் இரண்டு கோடி சந்தாதாரர்களை பெற்று அவருடைய பிரதமர் மோடியின் யூ-டியூப் சேனல் சாதனை செய்துள்ளது.. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பிரேசில் அதிபர் இரண்டாவது இடத்திலும், உக்ரைன் அதிபர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அமெரிக்க அதிபர் நான்காவது இடத்திலும் கனடா பிரதமர் யூ-டியூப் சேனல் பத்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது