இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது: புதின் பேட்டி..!

சனி, 9 டிசம்பர் 2023 (10:17 IST)
இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என ரஷ்யா அதிபர் புதின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
மாஸ்கோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் பதில் அளித்தபோது ’இந்தியாவின் நலன் இந்திய மக்களை நலம் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது. 
 
அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். மோடியை அச்சுறுத்த முடியும் என்பதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. உண்மையை சொல்வதென்றால் இந்தியாவின் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் கடினமான முடிவுகளை பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
 ரஷ்ய அதிபர் புதின் அவர்களின் இந்த பேட்டியை ரஷ்ய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது என்பதும் இந்திய ஊடகங்களிலும் இந்த செய்தி வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்