புத்தாண்டில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி! திருச்சியில் ஏற்பாடுகள் தீவிரம்!

ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (10:44 IST)
2024ம் ஆண்டு புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் புத்தாண்டிற்கு மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.



தமிழ்நாட்டில் அதிகமான விமான சேவைகளை மேற்கொண்டு வரும் விமான நிலையங்களில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. நாள்தோறும் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிகரிக்கும் விமான பயணங்களுக்கு ஏற்ற வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு 200 பேர் இருக்கை கொண்ட பெரிய விமானங்களும் வந்து செல்லும் வகையில் புதிய முனையத்தை கட்டமைக்க 951 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 134 ஏக்கர் நிலப்பரப்பில் 75 ஆயிரம் சதுர அடியில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் வந்து செல்ல 12 வழித்தடங்கள், பயணிகள் சென்று வர 4 வாயில்கள், 60 சோதனை கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விமான முனையத்தை புத்தாண்டில் ஜனவரி 2ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் திருச்சிக்கு வருகை தர உள்ள நிலையில் திருச்சியில் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்