11 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்! – புத்தாண்டில் வழங்கும் பிரதமர்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (08:29 IST)
எதிர்வரும் புத்தாண்டு அன்று 11 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 ஆயிரம் வழங்க உள்ளார்.

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு முதலாக தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 11 கோடியே 60 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய அடுத்த தவணையை பிரதமர் மோடி புத்தாண்டு அன்று நேரடியாக விவசாயிகள் வழங்க கணக்கில் வழங்க உள்ளார். மேலும் அன்றைய தினம் 10 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்