விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் மோடி

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (12:42 IST)
விவசாயிகளுக்கு 9-வது தவணை நிதியாக ரூ.19,500 கோடியை 9.75 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி இன்று விடுவித்தார். 

 
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 9-வது தவணை நிதியாக ரூ.19,500 கோடியை 9.75 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி இன்று விடுவித்தார். 
 
இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் வரையில் 68.76 கோடி பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என விவசாயிகள் வங்கிக்கணக்கில் இதுவரை ரூ.1.38 கோடி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்