வெற்றியும், தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம்! – ஹாக்கி வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:52 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடி ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில் இன்று காலை நடந்த ஆடவர் ஒலிம்பிக் இரண்டாவது காலிறுதியில் பெல்ஜியம் அணியை இந்திய அணி எதிர்கொண்டு 5-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இதுகுறித்து ஆறுதலாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ” வெற்றிகளும் தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்முடைய ஆடவர் ஆக்கி அணி வீரர்கள் சிறந்த விளையாட்டை வழங்கினர்.  அடுத்த போட்டியில் சிறப்புடன் விளையாட வாழ்த்துகள்.  வருங்காலங்களிலும் சிறந்த முறையில் செயல்பட எனது வாழ்த்துகள்.  நமது விளையாட்டு வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்