பிரசித்தி பெற்ற மகா காளேஸ்வரர் கோவில் புனரமைப்பு! – பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (09:32 IST)
மத்திய பிரதேசத்தின் புகழ்பெற்ற மகா காளேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் திருப்பணிகள் நிறைவடைந்த பகுதிகளை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் புகழ்பெற்ற சிவன் கோவிலான மகா காளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இதை காண நாடு முழுவதிலும் இருந்து பல மக்கள் இந்த கோவிலுக்கு தரிசனத்திற்காக வருகை தருவதால் முக்கிய சுற்றுலா பகுதியாகவும் விளங்குகிறது.

ALSO READ: இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

மகா காளேஸ்வரர் கோவிலை புணரமைப்பதற்கான பணிகள் ரூ.316 கோடி மதிப்பில் தொடங்கி துரிதமாய் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கோவில் வளாகம் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திருப்பணிகள் நிறைவடைந்த பகுதிகளை முதற்கட்டமாக இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார்.

பல்வேறு வசதிகளுடன் நவீனமாக உருவாகியுள்ள வளாக பகுதியின் வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்