தாமதமாக விழாவுக்கு வந்ததால் கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
சனி, 1 அக்டோபர் 2022 (13:05 IST)
விழாவுக்கு வர தாமதமானதால் கையெடுத்து கும்பிட்டு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக அரசியல்வாதிகள் ஒரு விழாவிற்கு வருகை தருகிறார்கள் என்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என்று கூறப்பட்டு வருகிறது.பல மணி நேரம் இதனால் பொதுமக்கள் காக்க வைக்கப்படுவதாகவும் கூறப்படுவது உண்டு
அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று பொதுமக்கள் விழா ஒன்றில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அந்த விழாவுக்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. இதனையடுத்து அவர் விழா மேடை ஏறிய உடன் அனைவரிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்
அவரது இந்த செய்கை பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.