பிரதமர் மோடி, தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைத்தார் !

ஞாயிறு, 8 மார்ச் 2020 (13:22 IST)
பிரதமர் மோடி, தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைத்தார் !

பிரதமர் நரேந்திர மோடி, வரும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, நம் நாட்டு பெண்கள் எனது சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மார்ச் 3 ஆம் தேதி  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ( மார்ச் 8 ) மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளை 7 பெண் சாதனையாளர்களிடம் கொடுத்துள்ளார்.
 
பிரதமர் மோடி, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கணக்கு வைத்துள்ளார்.
 
அவ்வப்போது, முக்கியமான கருத்துகளை, தேசம் சார்ந்த கருத்துகளையும், தனது சொந்த கருத்துகளையும் இதில் பதிவிட்டு வருகிறார்.
 
 
தற்போது பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை, 53.23 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். பேஸ்புக் பக்கத்தில்,44 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,35.2 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.
 
இந்நிலையில் வரும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது சமூக வலைதளக் கணக்குகளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்த நிலையில், இன்று அவர் , மகளிர் தினத்துக்கு வாழ்த்துகள் கூறி, தனது தனது சமூக வலைதள கணக்குகளை 7 பெண் சாதனையாளர்களிடம் கொடுத்துள்ளார்.
 
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது : 
 
சில நாட்களுக்கு முன் நான் கூறியது போன்று 7 பெண் சாதனைப் பெண்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை எனது சமூக வலைதளங்களில் பகிர்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

Greetings on International Women’s Day! We salute the spirit and accomplishments of our Nari Shakti.
As I’d said a few days ago, I’m signing off. Through the day, seven women achievers will share their life journeys and perhaps interact with you through my social media accounts.

— Narendra Modi (@narendramodi) March 8, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்