சசிகலா விடுதலையானால்... அரசியலில் மாற்றம் வரும் - சுப்பிரமணிய சுவாமி ஆரூடம் !

வெள்ளி, 6 மார்ச் 2020 (16:51 IST)
சசிகலா விடுதலையானால்... அரசியலில் மாற்றம் வரும் - சுப்பிரமணிய சுவாமி ஆரூடம் !

சொத்துக் குவிப்பு வழக்கில் தற்போது பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா விடுதலையானால், தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். 
 
அரசியலில் மிக முக்கிய ஆளுமையாகப் பார்க்கப்படுபவர் சுப்பிரமணிய சுவாமி. இவர்  பாஜகவில் மூத்த தலைவர் ஆவார். இவர் பாஜக தலைவர்களையும், பிரதமர்மோடி மற்றும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவ்வப்போது, விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில், அவர் சசிகலா குறித்து கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 
 
சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும் ; சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், சிசிஏ குறித்து அவர், சிஏஏவால் எந்தப் பிரச்சனையும் இல்லை;  யாருடைய குடியுரிமையும் பறிக்கப்போவதில்லை; இந்த ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம் ஆனால் அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது.
சசிகலா விடுதலையானால்... அரசியலில் மாற்றம் வரும் - சுப்பிரமணிய சுவாமி ஆரூடம் !
நம் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மோசமாக உள்ளது. அதனை சரி செய்யவேண்டும்  எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்