காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (23:09 IST)
காஞ்சிபுரம் வெடிவிபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில்  நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் திருபூபதி, முருகன், சசிகலாதேவி வயது , திரு.சுதர்சன், வித்யா  மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தமிழ் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வெடிபொருள் சேமிப்புகிடங்கின் உரிமையாளரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘இவ்விபத்தில், உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் ‘’உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குதலா 3 இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாகத்’ தெரிவித்தார்.

இன்று பிரதமர் மோடி, காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரு.5000 நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதற்கு, பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு நன்றி கூறி டுவீட் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்