சோகத்திலும் ஒரு ஆறுதல்: பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடாது.

திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:08 IST)
பெட்ரோல் டீசல் விலை ஒவ்வொரு நாளும் ஒருசில காசுகள் ஏறிக்கொண்டே போவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இந்த விலையேற்றத்தை தடுக்க பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும் அரசுகள் செவிமடுத்து கேட்கும் நிலையில் இல்லை

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ தொட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை  என்றே கருதப்படுகிறது. அதிகபட்சமாக பெட்ரோல், டீசல் விலை ரூ.99.99க்கு மேல் விற்க முடியாது.

ஏனெனில் இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களில் உள்ள மிஷினில் இரண்டு இலக்க எண்களில் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை காட்டும் வகையில் டிஸ்ப்ளே அமைக்கப்பட்டுள்ளது. ரூ.100 விலை என மாற்றினால் டிஸ்ப்ளேவில் 00 என்றுதான் காண்பிக்கும். அதாவது பெட்ரோல் விலை ரூ.100.50 என்றால் டிஸ்ப்ளேவில் ரூ.00.50 என்றுதான் காண்பிக்கும். இது கிட்டத்தட்ட கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஒய்டுகே பிரச்சனை போன்றது. இதனை சரிசெய்யாமல் பெட்ரோல், டீசல் விலையை ரூ.100 என மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டிருப்பதால் ஒருசில நாட்களில் இதன் விலை ரூ.100ஐ தொட்டுவிடும் என்ற வருத்தத்தோடு இருந்த மக்களுக்கு இந்த செய்தி ஒரு சிறு ஆறுதல் ஆகும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்