பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்; பெட்ரோலியத்துறை அமைச்சர் விருப்பம்

திங்கள், 17 செப்டம்பர் 2018 (18:21 IST)
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என விரும்புவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 
பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரூ.100-ஐ தொடும் நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பாத இல்லை.
 
ராஜாஸ்தான் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
 
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர என்று நான் விரும்புகிறேன். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்தான் இதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கு தான் வலிமை அதிகம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்