ரீசார்ஜ் கட்டணம் விலை உயர்வு; ஏர்டெல், ஜியோவுக்கு எதிராக ட்ரெண்டிங்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (09:39 IST)
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக பலர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவைகளில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்குகளாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களது ரீசார்ஜ் ப்ளான்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தின.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதை தொடர்ந்து தற்போத் ஜியோவும் தனது ரீசார்ஜ் கட்டணங்களை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அடுத்தடுத்து மூன்று நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் #BoycottJioVodaAirtel என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்