ஒமிக்ரான்: பயணத் தடையை நீக்க தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்

Webdunia
தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார்.


"தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை நியாயமற்றது. பாகுபாடானது. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம். பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
 
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை பயணத் தடை விதித்திருக்கும் நாடுகளில் அடங்கும்.
 
“அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை கொரோனா திரிபு அடைவதை நிறுத்த முடியாது. பயணத் தடையினால் பயன் இல்லை“ என்று ராமபோசா தெரிவித்துள்ளார்.
 
திரிபு அடைந்த கொரோனா வைரஸ் ஒமிக்ரான் இம்மாத தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்