கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் - பிரதமர் மோடி

செவ்வாய், 3 மார்ச் 2020 (15:25 IST)
கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் - பிரதமர் மோடி

சீனா தேசத்திலுள்ள வூபே மாகாணத்தில்  கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாய் அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் பரவிய இந்த உயிர் கொல்லி வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை உலகெங்கிலும் மொத்தம் 3000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
 
சீனா தேசத்த அடுத்து, அருகே உள்ள தென்கொரியாவிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியாவில் இந்த நோய் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக  உயர்ந்துள்ளது. இரானில் 66 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 
அத்துடன் உலக அளவில் 90,000 க்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்தியாவிலும் இந்த உயிர்க் கொல்லி நோய் தாக்கக்கூடும் என பலரும் அச்சம் கொண்டிருந்த நிலையில், பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படதேவையில்லை; பல்வேறு துறை அமைச்சகங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறது என அதிகாரிகளுடனான அவச ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்